வியாழன், 17 மே, 2012

கவிதை தெரியாது எனக்கு

கவிதை எழுத தெரியாது எனக்கு
உன் வெட்கத்தை
மொழிபெயர்ப்பு செய்வதைத் தவிர - வேறு
கவிதை எழுத தெரியாது எனக்கு..................

இசைஞானி

நீ சிணுங்கும் போது தோன்றும்
ஒலியை பதிவுசெய்து உலகுக்கு தெரிவித்தேன்...
பட்டம் கொடுத்துவிட்டார்கள் எனக்கு
இசைஞானி என்று....................

குடியேற்றம்

என் இதயத்தில் உள்ள அவளின் நினைவுகள்
அனைத்தையும் காலி செய்தேன்
அழகிய கவிதை தொகுப்புகளாய் சென்று
குடியேறுகின்றன அவை அனைத்தும்
காகிதத்தில்............

தீண்டும் சுகம்

மலர்களை பறித்தால் வலிக்குமாம் அதற்கு.....
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்?
மலர்கள் மலர்வதே
உன் விரல்கள் தீண்டும் அந்த சுகத்துக்குதான் என்று...........

கள்ளத்தனம்

உன்னை பார்த்தவுடன் எனக்கு தோன்றும்
என் களங்கமில்லா சிரிப்புக்கு பின்னால்
கள்ளத்தனமாய் ஒளிந்துருக்கிறது
என் காதல்....................

வைரமடி நீ எனக்கு

சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !
நீ நடக்கும் போது உன் பாதங்களை தீண்டும்
மணல் துகள்களை விட்டுவிட்டு................

தனிமையில் அவள்

நான்கு அறைகள் கொண்ட
இருள் சூழ்ந்த வீட்டில்
தனிமையில் வாழ்கிறாள் அவள்...
என் இதயத்தில்.....

குயில் கூட்டத்து தலைவி

சத்தம் போட்டு பேசாதடி என் செல்லமே......
வெளியில் வந்து பார்
குயில்கள் எல்லாம்
உன் வீட்டு கூரையில்
மௌனமாய் நின்று கொண்டு
மனப்பாடம் செய்கின்றன
உன் குரலை............