சனி, 26 மே, 2012

எப்படி உரைப்பேன்

உன் கண்களைப் பார்த்தாலே
வெட்கப்பட்டு திரும்பிக்கொள்ளும்
என் கண்களை வைத்து எப்படி உரைப்பேன்
உன்னிடம் என் காதலை.............

உன் வெட்கம்

உன் விழிகள் பேசும் வார்த்தைகளுக்கு
அர்த்தம் புரியாமல் தவித்த எனக்கு
இதற்கு பெயர் தான் காதல் என்று
உணரவைத்தது உன் வெட்கம்..............

மொழி பெயர்ப்பு

உன் விழிகள் பேசும் வார்த்தைகளை
மொழிபெயர்க்கும் ஒரே மொழி
என் கவிதைகள்.......

வெள்ளி, 25 மே, 2012

அறிவுரை

காதலிக்க வேண்டாம் என்று
அறிவுரை சொல்லிக்கொண்டு திரிந்த என்னை
காதலிக்க சொல்லி அறிவுரை செய்தது
அவளின் அழகு..................

காதலுக்கு மரியாதை

அவளை காதலிப்பதன் மூலம்
காதலுக்கு மரியாதை செய்கிறது
என் இதயம்..............

நட்சத்திரங்கள்

உன் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடி
வார்த்தைகள் கிடைக்காமல் - நான்
அடைந்த தோல்விகளை எல்லாம்
வானத்தில் குறித்துவைத்தேன்
நட்சத்திரங்களாய்............

பேசும் வார்த்தைகள்

என் காதலை மேலும் மேலும்
அழகாய் மாற்றுகின்றன - அவள்
தினம் தினம் என்னுடன்
பேசும் வார்த்தைகள்.................

இதழ் பரிசு

என் கவிதைக்கு
பரிசளிக்க நினைத்த அவள் - என்
விரல்களில் இதழ் பதித்தாள்...
பிறகுதான் நினைத்தேன்
பாடியிருக்கலாம் என்று..............

இதய தாஜ்மஹால்

பிரிந்து சென்ற காதலியை
நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒவ்வொரு ஆணின் இதயமும்
ஒரு தாஜ்மஹால் தான்.............

குயில் பாட்டு

குயிலின் பாட்டு அழகுதான் எனக்கு
அவளின் குரலை கேட்காதவரை......

வெள்ளி, 18 மே, 2012

வெட்கம்

உன்னிடம் காதலை சொல்ல வந்தேன்.....
உன் வெட்கத்தைப் பார்த்து
வெளிவரவில்லை என் காதல்
வெட்கப்பட்டு..................

பொய்

காதல் அழிவதில்லையாம்....
அது பொய்
அழிந்துவிட்டது என் தாய் மீதான காதல்
உன்னை பார்த்தவுடன்.................

நண்பன்

நண்பகல் சூரியனும் எனக்கு நண்பன் தான்
நீ என்னுடன் இருக்கையில்.....

அற்ப சுகம்

நீ என் கன்னத்தில் முத்தமிடும்போது
உன் மூச்சுக்காற்று வந்து தீண்டும்
அந்த அற்ப சுகத்திற்காக ஏங்குதடி
என் காது மடல்................

வியாழன், 17 மே, 2012

மச்சம்

அவளை படைத்தவுடன் அழகிலே மயங்கிய பிரம்மன்
பூமியில் யார்கண்ணும் பட்டுவிடகூடாது என்று
திருஷ்டிக்காக கன்னத்தில் மை வைத்து அனுப்பிவிட்டான்
மச்சமாக................

பெயர் ஒன்றே போதுமடி எனக்கு

உலகில் உள்ள கவிஞர்கள் அனைவரும்
என்னிடம் போட்டிக்கு வந்தாலும்
நான் அஞ்சமாட்டேன்....
உன் பெயர் ஒன்றே போதுமடி எனக்கு
அவர்களை நான் வெல்வதற்கு..............

தேவதை

தொலைந்துபோன
ஒரு தேவதையை கண்டுபிடிக்க
கடவுள் என்னை
பூமிக்கு அனுப்பினான்
நான்
என் தேடலை முடித்துக்கொண்டேன்
உன்னை பார்த்தவுடன்...!!!

ஓரவஞ்சனைக்காரன்

பிரம்மனின் மகள் நீ !
அதனால்தான் அதிகமாக அக்கறைக்காட்டி
இத்தனை பேரழகாய் படைத்துவிட்டான்
அந்த ஓரவஞ்சனைக்காரன்........................

நிலவில் நீர்

வியர்வையில் நனைந்த
உன் நெற்றிப்பொட்டை கண்டால்
நிலவில் நீரா என்று
வியந்து போவார்கள் விஞ்ஞானிகள்................

வானவில்

உன் உதட்டு சாயத்தை தொட்டு
வானத்தில் பூசினேன் -
வானம் வெட்கப்பட்டு மாறியது
வானவில்லாக..............

கவிதை தெரியாது எனக்கு

கவிதை எழுத தெரியாது எனக்கு
உன் வெட்கத்தை
மொழிபெயர்ப்பு செய்வதைத் தவிர - வேறு
கவிதை எழுத தெரியாது எனக்கு..................

இசைஞானி

நீ சிணுங்கும் போது தோன்றும்
ஒலியை பதிவுசெய்து உலகுக்கு தெரிவித்தேன்...
பட்டம் கொடுத்துவிட்டார்கள் எனக்கு
இசைஞானி என்று....................

குடியேற்றம்

என் இதயத்தில் உள்ள அவளின் நினைவுகள்
அனைத்தையும் காலி செய்தேன்
அழகிய கவிதை தொகுப்புகளாய் சென்று
குடியேறுகின்றன அவை அனைத்தும்
காகிதத்தில்............

தீண்டும் சுகம்

மலர்களை பறித்தால் வலிக்குமாம் அதற்கு.....
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்?
மலர்கள் மலர்வதே
உன் விரல்கள் தீண்டும் அந்த சுகத்துக்குதான் என்று...........

கள்ளத்தனம்

உன்னை பார்த்தவுடன் எனக்கு தோன்றும்
என் களங்கமில்லா சிரிப்புக்கு பின்னால்
கள்ளத்தனமாய் ஒளிந்துருக்கிறது
என் காதல்....................

வைரமடி நீ எனக்கு

சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !
நீ நடக்கும் போது உன் பாதங்களை தீண்டும்
மணல் துகள்களை விட்டுவிட்டு................

தனிமையில் அவள்

நான்கு அறைகள் கொண்ட
இருள் சூழ்ந்த வீட்டில்
தனிமையில் வாழ்கிறாள் அவள்...
என் இதயத்தில்.....

குயில் கூட்டத்து தலைவி

சத்தம் போட்டு பேசாதடி என் செல்லமே......
வெளியில் வந்து பார்
குயில்கள் எல்லாம்
உன் வீட்டு கூரையில்
மௌனமாய் நின்று கொண்டு
மனப்பாடம் செய்கின்றன
உன் குரலை............