சனி, 26 டிசம்பர், 2020

முத்தம்

 


நம் சந்திப்பை 
நம் இதயங்களைவிட 
நம் இதழ்கள் தான் 
அதிகம் விரும்புகின்றன 
அடிக்கடி 
தழுவிக்கொள்வதாலோ என்னவோ !?

முத்தம்

 


அழுது அடம்பிடிக்கும் போதெல்லாம்

இனிப்புகள் தந்தால் 

இன்புற்றுப் போவேனாம் 

நான் சிறுவயதில் 


இப்பொழுதோ 

உன் இதழ் 

முத்தங்கள் மட்டுமே 

போதுமானதாக இருக்கின்றன.!