செவ்வாய், 14 நவம்பர், 2017

காகித தாஜ்மஹால்


என் வேதனைகளை
உன்னிடம் எடுத்துக்கூறும்
ஒவ்வொரு கடிதமும்
உன் நினைவால்
நான் எழுப்பிய தாஜ்மஹால்...!!!

ஓர் வண்ண வானவில்ஒரேயொரு வண்ணம் கொண்ட
ஓர் அழகான வானவில்
உன் மைதீட்டிய விழிகள்
ஒவ்வொன்றும்...!!

செவ்வாய், 20 டிசம்பர், 2016

பேரழகி Perazhagi

பேரழகி

பேரழகியாய் படைப்பதெப்படி
என்னும் புத்தகத்தை
தொலைத்துவிட்டான் பிரம்மன்
புத்தகம் பூமியில்
உன் உருவில்...!!!


 

வியாழன், 15 டிசம்பர், 2016

Sirpi - சிற்பி


Vinthaikavi - விந்தைக்கவி

விந்தைக்கவி  
 
தலைசிறந்த கவிஞனெல்லாம்
தலைகுனிந்து தான்போவான்
உன்
ஓரிரு வினாடி வெட்கம் சிந்தும்
கவிதைத் துளியிடம் தோற்றுவிட்டு...!

Ezhuththoviyam - எழுத்தோவியம்

எழுத்தோவியம்

மொழியென்னும் தூரிகைகொண்டு
எழுத்துக்கள் என்ற வண்ணங்களால்
தீட்டப்பட்ட எழில்மிகு ஓவியம்
உன் பெயர் !!!

புதன், 3 ஜூன், 2015

மூக்குத்தி

தேய்பிறை காணாத
ஒரு குறுநிலவு
உன்
சிறுகல் மூக்குத்தி!!!

முத்தம் - Tamil kadhal Kavithiagal

என் முத்தங்களைச்
சேமித்து வைக்கும்
ரோஜா இதழ்கள் 
உன் உதடுகள் !!!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

எழுதத்தான் தோன்றுகிறது எனக்கு - Ezhuthathan Thondrugirathu Enaku - Tamil Kadhal Kavithaigal

மையிட்ட காரணத்தினாலோ என்னவோ
உன் விழிகளைப் பார்த்தாலே
எழுதத்தான் தோன்றுகிறது எனக்கு -
கவிதைகளை...


maiyitta karanathinalo ennavo
un vizhigalap parththale
ezhuthathan thondrugirathu enakku -
kavithaigalai....