செவ்வாய், 24 டிசம்பர், 2013

Tamil Kadhal Kavithaigal - பிறந்தநாள்

பிரம்மனின்
கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் - அவன்
கற்பனைகள் தொலைந்த நாள்..!!!

வெள்ளி, 20 டிசம்பர், 2013

Tamil Kadhal Kavithaigal - பிரம்மனின் கடமை

உன்னைத் தவிர 
மற்றப் பெண்களைக் 
காணும் பொழுதெல்லாம்  
பிரம்மன் கடமைக்கு 
செய்திருப்பதை உணர்கிறேன்.....
என் தேவதையே 
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான் 
பிரம்மன் செய்த 
கடமையை எண்ணி 
வியந்து  நிற்கின்றேன்!!!!! 

புதன், 4 டிசம்பர், 2013

Tamil Kadhal Kavithaigal | கவிஞனையும் வென்றுவிடும்

உன்
கார்குழல்
கனியிதழ்
கயல்விழி
மழலைச் சிணுங்கல் 
கிளிக் கொஞ்சல்
குயில் குரல்
செல்லக்கோபம்
அனிச்சை நாணம்
மெல்லிடை
அன்ன நடை
மயில் நாட்டியம்
கொலுசின் ஒலி
பாதத் தடங்கள்
இவைகளை வரையறுத்து
உன் பெயரை தலைப்பாக வைத்து
நான் எழுதிய வாக்கியங்கள்
உலகின் தலைசிறந்த
கவிஞனையும் வென்றுவிடும்......

புதன், 16 அக்டோபர், 2013

Vanavil Azhagu - வானவில் விழியழகு

உன் மை தீட்டிய 
விழியழகை ரசித்த பின்னால் 
பல வண்ணம் காட்டுகிற 
வானவில்லும் எனக்கு 
வெறும் கறுப்புக்கோடு தான்!

திங்கள், 8 ஜூலை, 2013

புலமைப் பெற்றுவிட்டேன்

எந்த பள்ளியிலும் பயிலவில்லை 
எந்த கல்லூரியிலும் கற்கவில்லை 
எந்த புலவரிடமும் கற்றுத் தர சொல்லி நிற்கவில்லை 
ஆனாலும் புலமைப் பெற்றுவிட்டேன் 
உன் 
விழியசைவு, வெட்கம், மழலைச்சினுங்கல் 
இவைகளை ரசித்த பிறகு..........

புதன், 5 டிசம்பர், 2012

தாஜ்மஹால் வருந்தியது

உன் மீது 
நான் வைத்துள்ள காதலை 
தாஜ்மஹாலிடம் வர்ணித்தேன். 
தாஜ்மஹால் வருந்தியது
ஷாஜஹான் தன்னை கட்டியதற்காக.......

செவ்வாய், 4 டிசம்பர், 2012

வானவில்


உன் அதரங்களை தீண்டும் காற்றுக்கும் 
வான்முகில்  கூட்டத்துக்கும் 
இடையே நடக்கும் 
மகரந்தச்சேர்க்கை............

திங்கள், 3 டிசம்பர், 2012

வீர மரணம்

தினமும் 
வீர மரணம் அடையும் 
வீரன் நான் 
உன் விழிகளின் படையெடுப்பால்.......

வியாழன், 29 நவம்பர், 2012

ஒப்பற்ற பேரழகி

என் தேவதையே!

உன் கார்குழலை
கார்முகிலோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு கருமை இல்லை!

உன் கருவிழியை
கயல்விழியோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு விழி ஈர்ப்பு இல்லை!

உன் சிரிப்பை
மலர்களோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு புன்னகை இல்லை!

உன் செல்லக்குரலை
குயிலின் பாட்டோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு இனிமை  இல்லை!

உன் மழலை பேச்சை
கிளியின் பேச்சோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு சிணுங்கல் இல்லை!

உன் முகத்தை
வான்மதியோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அதற்கு ஒளி இல்லை!

உன் கிறுக்கல்களை
வைரமுத்து வரிகளோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு உயிர் இல்லை!

உன் நடையை
தோகைமயிலோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு நளினம் இல்லை!

உன் பாதச் சுவடுகளை
மோனலிசா ஓவியத்தோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அது அழகு இல்லை!

உன்னை ஒப்பிட முடியாமல்
என் தோல்வியை ஒப்புக்கொண்டு
நீ ஒப்பற்ற பேரழகி என்று
ஒத்துக் கொண்டேன்............

திருடிய கவிதை

என் இதயம் என்னும் ஏட்டில்
தோன்றிய கவிதைகள் எல்லாம்
உன் நினைவுகள் என்னும்
புத்தகத்தில் இருந்து
திருடப்பட்டவை...............