புதன், 5 டிசம்பர், 2012

தாஜ்மஹால் வருந்தியது

உன் மீது 
நான் வைத்துள்ள காதலை 
தாஜ்மஹாலிடம் வர்ணித்தேன். 
தாஜ்மஹால் வருந்தியது
ஷாஜஹான் தன்னை கட்டியதற்காக.......

செவ்வாய், 4 டிசம்பர், 2012

வானவில்


உன் அதரங்களை தீண்டும் காற்றுக்கும் 
வான்முகில்  கூட்டத்துக்கும் 
இடையே நடக்கும் 
மகரந்தச்சேர்க்கை............

திங்கள், 3 டிசம்பர், 2012

வீர மரணம்

தினமும் 
வீர மரணம் அடையும் 
வீரன் நான் 
உன் விழிகளின் படையெடுப்பால்.......

வியாழன், 29 நவம்பர், 2012

ஒப்பற்ற பேரழகி

என் தேவதையே!

உன் கார்குழலை
கார்முகிலோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு கருமை இல்லை!

உன் கருவிழியை
கயல்விழியோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு விழி ஈர்ப்பு இல்லை!

உன் சிரிப்பை
மலர்களோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு புன்னகை இல்லை!

உன் செல்லக்குரலை
குயிலின் பாட்டோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு இனிமை  இல்லை!

உன் மழலை பேச்சை
கிளியின் பேச்சோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு சிணுங்கல் இல்லை!

உன் முகத்தை
வான்மதியோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அதற்கு ஒளி இல்லை!

உன் கிறுக்கல்களை
வைரமுத்து வரிகளோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு உயிர் இல்லை!

உன் நடையை
தோகைமயிலோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு நளினம் இல்லை!

உன் பாதச் சுவடுகளை
மோனலிசா ஓவியத்தோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அது அழகு இல்லை!

உன்னை ஒப்பிட முடியாமல்
என் தோல்வியை ஒப்புக்கொண்டு
நீ ஒப்பற்ற பேரழகி என்று
ஒத்துக் கொண்டேன்............

திருடிய கவிதை

என் இதயம் என்னும் ஏட்டில்
தோன்றிய கவிதைகள் எல்லாம்
உன் நினைவுகள் என்னும்
புத்தகத்தில் இருந்து
திருடப்பட்டவை...............

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

உதட்டு சாயம் - முத்தம் - வானவில்

உன் வீட்டு ஜன்னலில் இருந்து
நீ எனக்கு காற்றில் அனுப்பிய
முத்தங்களை எல்லாம்
தவறாமல் சேர்த்து வந்தேன்....
தவறிய முத்தங்கள் எல்லாம்
வானத்தை அடைந்து
மாறியது வானவில்லாக.................

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

காதலிக்க முடியாது

உன் கார்குழல்
உன் கயல்விழிகள்
உன் மலரிதழ்கள்
உன் மழலைச் சிணுங்கல்கள்
உன் செல்லக் கோபங்கள்
உன் கொலுசின் ஒலிகள்
இவைகளைப் போல்
வேறு எவராலும்
என்னைக் காதலிக்க முடியாது.........

செவ்வாய், 31 ஜூலை, 2012

கவிதைப் புன்னகை

உன் அழகை வர்ணித்து
நான் எழுதிய கவிதைகளை எல்லாம்
உன்னிடம் காண்பித்தேன்....
படித்துவிட்டு வெட்கத்தில்
இதழோரம் புன்முறுவல் செய்தாய்...
தோற்றுப் போனது
என் அத்தனை கவிதைகளும்
உன் புன்னகையில்.................

வெள்ளி, 27 ஜூலை, 2012

முத்தம்

நீ வெட்கம்கொண்டு,
உன் முகத்தை மறைக்கும்
விரல்கள் என்னும் திரைகளை
தொட்டு தொட்டு திறக்கும் திறவுகோல்
என் உதடுகள்..........

வெள்ளி, 20 ஜூலை, 2012

கொலுசுகள்

உன் சிரிப்பொலியை
எப்போடியோ பதிவுசெய்து வைத்துகொண்டு
அதை அப்படியே ஒலிபரப்பு செய்கின்றன
உன் பாதக்கொலுசுகள்...............