எந்த பள்ளியிலும் பயிலவில்லை எந்த கல்லூரியிலும் கற்கவில்லை எந்த புலவரிடமும் கற்றுத் தர சொல்லி நிற்கவில்லை! ஆனாலும் புலமைப் பெற்றுவிட்டேன் உன் விழியசைவு, வெட்கம், மழலைச்சினுங்கல் இவைகளை ரசித்த பிறகு!!!
உன்னைத் தவிர மற்றப் பெண்களைக் காணும் பொழுதெல்லாம் பிரம்மன் கடமைக்கு செய்திருப்பதை உணர்கிறேன்..... என் தேவதையே உன்னைக் காணும்பொழுது மட்டும்தான் பிரம்மன் செய்த கடமையை எண்ணி வியந்து நிற்கின்றேன்!!!!!
உன் கார்குழல் கனியிதழ் கயல்விழி மழலைச் சிணுங்கல் கிளிக் கொஞ்சல் குயில் குரல் செல்லக்கோபம் அனிச்சை நாணம் மெல்லிடை அன்ன நடை மயில் நாட்டியம் கொலுசின் ஒலி பாதத் தடங்கள் இவைகளை வரையறுத்து உன் பெயரை தலைப்பாக வைத்து நான் எழுதிய வாக்கியங்கள் உலகின் தலைசிறந்த கவிஞனையும் வென்றுவிடும்......
எந்த பள்ளியிலும் பயிலவில்லை எந்த கல்லூரியிலும் கற்கவில்லை எந்த புலவரிடமும் கற்றுத் தர சொல்லி நிற்கவில்லை ஆனாலும் புலமைப் பெற்றுவிட்டேன் உன் விழியசைவு, வெட்கம், மழலைச்சினுங்கல் இவைகளை ரசித்த பிறகு..........