வெள்ளி, 18 மே, 2012

அற்ப சுகம்

நீ என் கன்னத்தில் முத்தமிடும்போது
உன் மூச்சுக்காற்று வந்து தீண்டும்
அந்த அற்ப சுகத்திற்காக ஏங்குதடி
என் காது மடல்................

வியாழன், 17 மே, 2012

மச்சம்

அவளை படைத்தவுடன் அழகிலே மயங்கிய பிரம்மன்
பூமியில் யார்கண்ணும் பட்டுவிடகூடாது என்று
திருஷ்டிக்காக கன்னத்தில் மை வைத்து அனுப்பிவிட்டான்
மச்சமாக................

பெயர் ஒன்றே போதுமடி எனக்கு

உலகில் உள்ள கவிஞர்கள் அனைவரும்
என்னிடம் போட்டிக்கு வந்தாலும்
நான் அஞ்சமாட்டேன்....
உன் பெயர் ஒன்றே போதுமடி எனக்கு
அவர்களை நான் வெல்வதற்கு..............

தேவதை

தொலைந்துபோன
ஒரு தேவதையை கண்டுபிடிக்க
கடவுள் என்னை
பூமிக்கு அனுப்பினான்
நான்
என் தேடலை முடித்துக்கொண்டேன்
உன்னை பார்த்தவுடன்...!!!

ஓரவஞ்சனைக்காரன்

பிரம்மனின் மகள் நீ !
அதனால்தான் அதிகமாக அக்கறைக்காட்டி
இத்தனை பேரழகாய் படைத்துவிட்டான்
அந்த ஓரவஞ்சனைக்காரன்........................

நிலவில் நீர்

வியர்வையில் நனைந்த
உன் நெற்றிப்பொட்டை கண்டால்
நிலவில் நீரா என்று
வியந்து போவார்கள் விஞ்ஞானிகள்................

வானவில்

உன் உதட்டு சாயத்தை தொட்டு
வானத்தில் பூசினேன் -
வானம் வெட்கப்பட்டு மாறியது
வானவில்லாக..............

கவிதை தெரியாது எனக்கு

கவிதை எழுத தெரியாது எனக்கு
உன் வெட்கத்தை
மொழிபெயர்ப்பு செய்வதைத் தவிர - வேறு
கவிதை எழுத தெரியாது எனக்கு..................

இசைஞானி

நீ சிணுங்கும் போது தோன்றும்
ஒலியை பதிவுசெய்து உலகுக்கு தெரிவித்தேன்...
பட்டம் கொடுத்துவிட்டார்கள் எனக்கு
இசைஞானி என்று....................

குடியேற்றம்

என் இதயத்தில் உள்ள அவளின் நினைவுகள்
அனைத்தையும் காலி செய்தேன்
அழகிய கவிதை தொகுப்புகளாய் சென்று
குடியேறுகின்றன அவை அனைத்தும்
காகிதத்தில்............