உன் வீட்டு ஜன்னலில் இருந்து
நீ எனக்கு காற்றில் அனுப்பிய
முத்தங்களை எல்லாம்
தவறாமல் சேர்த்து வந்தேன்....
தவறிய முத்தங்கள் எல்லாம்
வானத்தை அடைந்து
மாறியது வானவில்லாக.................
உன் கார்குழல்
உன் கயல்விழிகள்
உன் மலரிதழ்கள்
உன் மழலைச் சிணுங்கல்கள்
உன் செல்லக் கோபங்கள்
உன் கொலுசின் ஒலிகள்
இவைகளைப் போல்
வேறு எவராலும்
என்னைக் காதலிக்க முடியாது.........
உன் அழகை வர்ணித்து நான் எழுதிய கவிதைகளை எல்லாம் உன்னிடம் காண்பித்தேன்.... படித்துவிட்டு வெட்கத்தில் இதழோரம் புன்முறுவல் செய்தாய்... தோற்றுப் போனது என் அத்தனை கவிதைகளும் உன் புன்னகையில்.................