வியாழன், 16 ஆகஸ்ட், 2012

காதலிக்க முடியாது

உன் கார்குழல்
உன் கயல்விழிகள்
உன் மலரிதழ்கள்
உன் மழலைச் சிணுங்கல்கள்
உன் செல்லக் கோபங்கள்
உன் கொலுசின் ஒலிகள்
இவைகளைப் போல்
வேறு எவராலும்
என்னைக் காதலிக்க முடியாது.........

செவ்வாய், 31 ஜூலை, 2012

கவிதைப் புன்னகை

உன் அழகை வர்ணித்து
நான் எழுதிய கவிதைகளை எல்லாம்
உன்னிடம் காண்பித்தேன்....
படித்துவிட்டு வெட்கத்தில்
இதழோரம் புன்முறுவல் செய்தாய்...
தோற்றுப் போனது
என் அத்தனை கவிதைகளும்
உன் புன்னகையில்.................

வெள்ளி, 27 ஜூலை, 2012

முத்தம்

நீ வெட்கம்கொண்டு,
உன் முகத்தை மறைக்கும்
விரல்கள் என்னும் திரைகளை
தொட்டு தொட்டு திறக்கும் திறவுகோல்
என் உதடுகள்..........

வெள்ளி, 20 ஜூலை, 2012

கொலுசுகள்

உன் சிரிப்பொலியை
எப்போடியோ பதிவுசெய்து வைத்துகொண்டு
அதை அப்படியே ஒலிபரப்பு செய்கின்றன
உன் பாதக்கொலுசுகள்...............

திங்கள், 16 ஜூலை, 2012

வண்ணத்துப்பூச்சி:

உன் இதழ்களை, 
மலர் என்று நினைத்து
மதுவருந்த வந்த பூச்சிகள் எல்லாம்
மது இல்லாமல் ஏமாற்றமடைந்து
உன் இதழ்களின் சாயத்தில் நனைந்து
உருமாறிச் செல்கின்றன.....
வண்ணத்துப்பூச்சிகளாய் !!!

வெள்ளி, 15 ஜூன், 2012

கற்றுக்கொள்

அவள் கண்களைப் பார்த்து
பேசும் ஒவ்வொரு ஆணும்
கண்டிப்பாக கற்றுக் கொள்வான்
கவிதை எழுத.....................

சனி, 26 மே, 2012

எப்படி உரைப்பேன்

உன் கண்களைப் பார்த்தாலே
வெட்கப்பட்டு திரும்பிக்கொள்ளும்
என் கண்களை வைத்து எப்படி உரைப்பேன்
உன்னிடம் என் காதலை.............

உன் வெட்கம்

உன் விழிகள் பேசும் வார்த்தைகளுக்கு
அர்த்தம் புரியாமல் தவித்த எனக்கு
இதற்கு பெயர் தான் காதல் என்று
உணரவைத்தது உன் வெட்கம்..............

மொழி பெயர்ப்பு

உன் விழிகள் பேசும் வார்த்தைகளை
மொழிபெயர்க்கும் ஒரே மொழி
என் கவிதைகள்.......

வெள்ளி, 25 மே, 2012

அறிவுரை

காதலிக்க வேண்டாம் என்று
அறிவுரை சொல்லிக்கொண்டு திரிந்த என்னை
காதலிக்க சொல்லி அறிவுரை செய்தது
அவளின் அழகு..................